முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா.
வைத்தியர் அருமைநாதன் ஸதீஸ்குமார் எழுதிய முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு திருகோணமலை மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் சம்பூர் தமிழ்க்கலாமன்ற உறுப்பினர் கவிஞர். ம. சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெறவுள்ளது. நிகழ்வின் முதன்மை அழைப்பாளராக முன்னாள் அதிபர் கலாபூஷணம் க. ஜெயநாதன் அவர்களும், கெளரவ அழைப்பாளராக வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர். அ . அச்சுதன் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை கலை மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ் விழாவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.