Posts

விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

Image
அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விலை உயர்வு, பால்மா விலை அதிகரிப்பு, எரிவாயு மற்றும் மின்கட்டண உயர்வு போன்ற அத்தியாவசிய செலவுகள் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தார்.குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் பல கிராமப்புற மற்றும் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல், சீனன்வெளி, நல்லூர் உள்ளிட்ட பகுதிகளும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு, கடற்கரைச்சேனை, கங்குவேலி ஆகிய கிராமங்களும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திரியாய், தென்னைமரவாடி, புல்மோட்டை, இறக்கக்கண்டி மற்றும் கிண்ணியா கரையோரப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த...

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு சுகாதாரப் பொதிகள் வழங்கல்

Image
UNOPS நிறுவனத்தின் நிதி உதவியுடனும், VRIDDHI Programme வலையமைப்பின் ஒத்துழைப்புடனும், வவுனியா மாவட்டத்தின் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பகுதிகளில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்குள் வாழும் 60 குடும்பங்களுக்கு சுகாதாரப் பொதிகள் (Hygiene Packs) வழங்கி வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அத்தியாவசிய சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நிவாரண உதவித் திட்டம் மனிதாபிமான அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், பிரதேச செயலகங்களின் அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், UNOPS நிறுவனத்தின் வடமாகாண மேற்பார்வையாளர் மற்றும் People for Justice (PFJ) அமைப்பின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

Image
வடமலை ராஜ்குமார் திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் 17 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேற்றல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி தேவஸ்தானம் முன்றலில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், பொதுமக்களுக்கு கஞ்சியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் கந்தசாமி செல்வராஜா, பட்டணமும் சூழலும் உப்புவெளி பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.

Image
(அன்புவழிபுரம் நிருபர்) உதயபுரி உதயா விருட்சக சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் ஆண், பெண் இருபாலருக்குமான மரத்தான் ஓட்டப் போட்டிகள் இடம்பெற்றதுடன், மாலை 6.00 மணியளவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அதன்படி கரப்பந்தாட்டப் போட்டி, பலூன் உடைத்தல், தேங்காய் திருவுதல், சங்கீதக் கதிரை, பலூன் டான்ஸ், தொப்பி மாற்றுதல், பலூன் பந்து பரிமாற்றம் மற்றும் கபடி உள்ளிட்ட போட்டிகள் மக்களின் உற்சாக பங்கேற்புடன் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக செல்வநாயகபுரம் தி/இந்துமகா வித்தியாலய அதிபர் ஆனந்தராஜா, உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) பஷீர் முகமட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆலய பரிபாலன சபைத் தலைவர், சனசமூக நிலையத் தலைவர், கிராம சங்கத் தலைவர், விளையாட்டு கழகத் தலைவர் மற்றும் பல பொதுமக்களும் கலந்து க...

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

Image
வவுனியா நீதிக்கான மக்கள் அமைப்பின் (PFJ) ஒருங்கிணைப்பிலும், UNOPS / VRIDDHI Programme நிறுவனங்களின் நிதி உதவியுடனும், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்று (06) வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான உதவித் திட்டமாக இந்நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நீதிக்கான மக்கள் அமைப்பின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் வழங்கப்பட்ட இவ்வுலர் உணவுப் பொதிகள் வெற்றிகரமாக பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தானர.

வரலாற்று ஆய்வாளர் கனகசபாபதி சரவணபவன் எழுதிய நூல் அறிமுக நிகழ்வு

Image
திருகோணமலை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் வரலாற்று ஆய்வாளர் கனகசபாபதி சரவணபவன் எழுதிய திருகோணமலை இராச்சியம் விக்கிரகங்கள் கல்வெட்டுகள் நூலின் அறிமுக விழா சனிக்கிழமை (25)மாலை 4.00 மணிக்கு திருகோணமலை மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு கிராம உத்தியோகத்தர் நாகலிங்கம் சந்திரசேகரம் தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக மேனாள் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து கொள்ள உள்ளார். மேலும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. ஸ்ரீபதி ஜெயகௌரி பங்கேற்கிறார். நிகழ்வில், நா. தம்பிராசா (சாம்பல்தீவு) அவர்களுக்கு நூல் சமர்ப்பணம் இடம்பெறுவதுடன், முதல் பிரதியை தென்கயிலை ஆதீனம் அகத்திய அடிகளார் பெற்றுக் கொள்கிறார். சிறப்புரையை வரலாற்று ஆய்வாளர் அருமைநாதன் சதீஸ்குமார் வழங்க உள்ளார். மேலும், பல்கலைக்கழக மாணவர்களான எமுத்தாளர்கள் கேஷிகன் இளமுருகநாதன் (சப்ரகமுவ பல்கலைக்கழகம்) மற்றும் சதுர்த்திகா உதயகுமார் (உருகுணை பல்கலைக்கழகம்) கருத்துரைகள் வழங்கவுள்ளனர். இந்நிக...

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்..

Image
தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த பங்குனி உத்தர பிரம்மோற்சவத்தின் பஞ்சரத இரதோற்சவம் ( தேர்த்திருவிழா) இன்று வெள்ளிக்கிழமை (17) காலை 8.00 மணிக்கு இடம் பெற்றது. மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் தேரில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுப்பதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் படத்தில் காணலாம்.