திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் 17 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேற்றல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி தேவஸ்தானம் முன்றலில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், பொதுமக்களுக்கு கஞ்சியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் கந்தசாமி செல்வராஜா, பட்டணமும் சூழலும் உப்புவெளி பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.







Comments
Post a Comment