Posts

Showing posts from April, 2026

வரலாற்று ஆய்வாளர் கனகசபாபதி சரவணபவன் எழுதிய நூல் அறிமுக நிகழ்வு

Image
திருகோணமலை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் வரலாற்று ஆய்வாளர் கனகசபாபதி சரவணபவன் எழுதிய திருகோணமலை இராச்சியம் விக்கிரகங்கள் கல்வெட்டுகள் நூலின் அறிமுக விழா சனிக்கிழமை (25)மாலை 4.00 மணிக்கு திருகோணமலை மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு கிராம உத்தியோகத்தர் நாகலிங்கம் சந்திரசேகரம் தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக மேனாள் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து கொள்ள உள்ளார். மேலும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. ஸ்ரீபதி ஜெயகௌரி பங்கேற்கிறார். நிகழ்வில், நா. தம்பிராசா (சாம்பல்தீவு) அவர்களுக்கு நூல் சமர்ப்பணம் இடம்பெறுவதுடன், முதல் பிரதியை தென்கயிலை ஆதீனம் அகத்திய அடிகளார் பெற்றுக் கொள்கிறார். சிறப்புரையை வரலாற்று ஆய்வாளர் அருமைநாதன் சதீஸ்குமார் வழங்க உள்ளார். மேலும், பல்கலைக்கழக மாணவர்களான எமுத்தாளர்கள் கேஷிகன் இளமுருகநாதன் (சப்ரகமுவ பல்கலைக்கழகம்) மற்றும் சதுர்த்திகா உதயகுமார் (உருகுணை பல்கலைக்கழகம்) கருத்துரைகள் வழங்கவுள்ளனர். இந்நிக...

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்..

Image
தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த பங்குனி உத்தர பிரம்மோற்சவத்தின் பஞ்சரத இரதோற்சவம் ( தேர்த்திருவிழா) இன்று வெள்ளிக்கிழமை (17) காலை 8.00 மணிக்கு இடம் பெற்றது. மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் தேரில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுப்பதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் படத்தில் காணலாம்.

பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்

Image
( சேனையூர் நிருபர் ) பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (12) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் மாலை 4.00 மணிக்கு திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கலாபூசணம் திருமலை நவம் தலைமையில் இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்தினை கலாபூசணம் திருமலை சந்திரன் வழங்க , வரவேற்புரையை திருமதி. தக்சாயினி காந்தீபன் வழங்கினார். இவ் விழாவில் முதன்மை அழைப்பாளராக வணக்கத்துக்குரிய எப்.ஆர்.சேவியர் ரஜீவ இருதயராஜ் கலந்து சிறப்பித்தார். முதன்மை விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. சிறிபதி. ஜெயகெளரியும், சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை உதவித்தொழில் ஆணையாளர் திருமதி. நவஜீவனா குபேந்திரனும், மிருதங்க கலாவித்தகர் திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சி. காண்டீபனும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் நூலின் முதல் பிரதிகளை விழாவின் அதிதிகளால் நூல் ஆசிரியரும் இணைத்து வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது. சிறப்பு பிர...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!

Image
(அ . அச்சுதன் ) திருகோணமலை மாவட்டம் , சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாற சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.இவர்களில் லக்சான் பேரரேரா (வயது 35) என்பவர் மாத்திரமே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்கிழமை (14) மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி பணி முன்னெடுக்கப்பட்டபோது அதில் ஒருவரின் சடலம் மாத்திரம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு ...