வரலாற்று ஆய்வாளர் கனகசபாபதி சரவணபவன் எழுதிய நூல் அறிமுக நிகழ்வு

திருகோணமலை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் வரலாற்று ஆய்வாளர் கனகசபாபதி சரவணபவன் எழுதிய திருகோணமலை இராச்சியம் விக்கிரகங்கள் கல்வெட்டுகள் நூலின் அறிமுக விழா சனிக்கிழமை (25)மாலை 4.00 மணிக்கு திருகோணமலை மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு கிராம உத்தியோகத்தர் நாகலிங்கம் சந்திரசேகரம் தலைமை வகிக்கிறார். பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக மேனாள் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து கொள்ள உள்ளார். மேலும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. ஸ்ரீபதி ஜெயகௌரி பங்கேற்கிறார். நிகழ்வில், நா. தம்பிராசா (சாம்பல்தீவு) அவர்களுக்கு நூல் சமர்ப்பணம் இடம்பெறுவதுடன், முதல் பிரதியை தென்கயிலை ஆதீனம் அகத்திய அடிகளார் பெற்றுக் கொள்கிறார். சிறப்புரையை வரலாற்று ஆய்வாளர் அருமைநாதன் சதீஸ்குமார் வழங்க உள்ளார். மேலும், பல்கலைக்கழக மாணவர்களான எமுத்தாளர்கள் கேஷிகன் இளமுருகநாதன் (சப்ரகமுவ பல்கலைக்கழகம்) மற்றும் சதுர்த்திகா உதயகுமார் (உருகுணை பல்கலைக்கழகம்) கருத்துரைகள் வழங்கவுள்ளனர். இந்நிகழ்வில் கலை இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்க

Comments

Popular posts from this blog

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்

உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.