உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.

(அன்புவழிபுரம் நிருபர்) உதயபுரி உதயா விருட்சக சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் ஆண், பெண் இருபாலருக்குமான மரத்தான் ஓட்டப் போட்டிகள் இடம்பெற்றதுடன், மாலை 6.00 மணியளவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அதன்படி கரப்பந்தாட்டப் போட்டி, பலூன் உடைத்தல், தேங்காய் திருவுதல், சங்கீதக் கதிரை, பலூன் டான்ஸ், தொப்பி மாற்றுதல், பலூன் பந்து பரிமாற்றம் மற்றும் கபடி உள்ளிட்ட போட்டிகள் மக்களின் உற்சாக பங்கேற்புடன் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக செல்வநாயகபுரம் தி/இந்துமகா வித்தியாலய அதிபர் ஆனந்தராஜா, உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) பஷீர் முகமட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆலய பரிபாலன சபைத் தலைவர், சனசமூக நிலையத் தலைவர், கிராம சங்கத் தலைவர், விளையாட்டு கழகத் தலைவர் மற்றும் பல பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். சமூக ஒற்றுமையையும் பாரம்பரிய கலாசாரத்தையும் வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்