பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்

( சேனையூர் நிருபர் ) பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (12) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் மாலை 4.00 மணிக்கு திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கலாபூசணம் திருமலை நவம் தலைமையில் இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்தினை கலாபூசணம் திருமலை சந்திரன் வழங்க , வரவேற்புரையை திருமதி. தக்சாயினி காந்தீபன் வழங்கினார். இவ் விழாவில் முதன்மை அழைப்பாளராக வணக்கத்துக்குரிய எப்.ஆர்.சேவியர் ரஜீவ இருதயராஜ் கலந்து சிறப்பித்தார். முதன்மை விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. சிறிபதி. ஜெயகெளரியும், சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை உதவித்தொழில் ஆணையாளர் திருமதி. நவஜீவனா குபேந்திரனும், மிருதங்க கலாவித்தகர் திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சி. காண்டீபனும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் நூலின் முதல் பிரதிகளை விழாவின் அதிதிகளால் நூல் ஆசிரியரும் இணைத்து வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது. சிறப்பு பிரதிகள் நூல் ஆசிரியரால் வழங்கப்பட்டது. வ. அ. இராசரத்தினம் நூற்றாண்டு மலர் அறிமுகத்தினை எமுத்தாளர், ஊடகவியலாளர் அ. அச்சுதன் வழங்க, மகரம் சூடிய மண் வெளியீட்டுரையை கலாபூசணம் க. யோகாநந்தம் வழங்க, மருதடியூர் மணியகாரர் அறிமுகவுரையை பாவலர்.ப. மதிபாலசிங்கம் வழங்க, கனவில் வந்த புத்தன் அறிமுகவுரையை கவிஞர். கனக. தீபகாந்தன் வழங்க, கூத்தில் நிமிர்ந்து நூல் அறிமுகத்தை சண்முகா இந்து மகளீர் கல்லூரி ஆசிரியை திருமதி. பகிரதி பாஸ்கர் வழங்க, கடல் கொண்ட காவியம் அறிமுகவுரையை கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரி திருமதி. சுகந்தினி. ஜீவிதன் வழங்க, எதிர்ச் சொல் கவிதை நூல் அறிமுகத்தினை ஊடகவியலாளர் கவிஞர் ச. திருச்செந்தூரன் வழங்க, சப்பை கவிதை நூல் அறிமுகத்தினை கோணலிங்க மகாவித்தியாலயத்தின் அதிபர் சம்பூரணி. திருமதி. சுஜந்தினி யுவராஜா வழங்க ஏற்புரையை நூலாசிரியர் பேராசிரியர் பாலாசுகுமார் வழங்கினார்.

Comments

Popular posts from this blog

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.